Friday, February 24, 2012

வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் அறிமுகம் :

வழிகாட்டல் ஆலோசனை வழங்களின் அறிமுகம் : 
முற்காலத்தில் மனதை அமைதிப்படுத்தவும்ää கட்டுப்பாட்டை நிலைநாட்டவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தையை விரித்தி செய்யவும் குறிப்பிடப்பட்ட நுட்பஙகள் நிலவின. அக்கால வாழ்க்கை முறை இலகுவாகவும் கற்கும் மாணவர் தொகை குறைவாகவும் ஆலோசனை சேவை இலகுவாகவும் இருந்தது. ஆசிரியர்ää பெற்றோர்ää மதகுருக்கள் மூலம் இத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது. 19ம் நூற்றாண்டு கைத்தொழில் புரட்சிää சனத்தொகை கட்டமைப்பு மாற்றம்ää சமூக பொருளாதார மாற்றம் காரணமாக சிக்கலான சமூதாயம் தோன்றியது. இதனால் வழிகாட்டல் ஆலோசனைக்கான தேவை ஏற்பட்டது. 20ம் நூற்றாண்டு ஆரம்பம் குசயடெம Pநசளழn 1908ல் பொஸ்டன் நகரில் தொழில் தெரிவு வழிகாட்டல் நிலையத்தை ஆரம்பித்தார்.
இவரின் கருத்துப்படி வழிகாட்டல் என்பது ஒரு தொழிலைத் தெரிந்து கொள்ள வழிகாட்டுவது ட்ரூமன் ஹெலி – 1944 மாணவனை பாடசாலையுடன் பொருத்தப்பாடைச் செய்வதற்கும் கல்வித்துறையினை தேர்தெடுக்கவும் செய்யும் உதவியாகும். பிற்காலத்தில் வழிகாட்டல் ஆலோசனை எண்ணக்கரு இத்துறையில் உட்சாகம் காட்டிய தத்துவவியலாளர்கள் மூலம் வளர்ந்தது. ஆலோசனை என்பது மிகவும் செலுமையான வாழ்க்கைக்குத் தேவையான திறன்களை பெற உதவும் ஒரு சிகிச்சை முறையாகும். ஆலோசனை என்பது ஆலோசனை நாடி தனது பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு ஆலோசகரை நேர்முகமாகச் சந்தித்து கலந்துரையாடி அப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அணுகுமுறைகளை தீர்த்துக் கொள்வதாகும்.
ஆலோசனை நோக்கம்: 1. தனியாள் விருத்தி 2. பிரச்சினைகள் வருமுன் தவிர்த்தல் 3. பிரச்சினைக்கு தீர்வு காணல். 4. பொருத்தப்பாடுகளைக் காண உதவி வழங்கல். கால் ஆர் றோஜஸ் - ஒருவருக்கு அவரைப்பற்றிய சுயவிளக்கத்தை ஏற்படுத்தி அவர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவரே தீர்த்துக்கொள்ள வழங்கப்படும் உதவி ஆலோசனையாகும்.
வழிகாட்டல் என்பது: வாழ்க்கையில் சகல சந்தந்ர்ப்பங்களிலும்ää எல்லாப்பருவங்களிலும் சூழலுடன் இயல்பாக்கம் காணவும் சுயதிறன்களை விருத்தி செய்யவும் பொருத்தமான தெரிவுகள் செய்யவும்ää தீர்மானங்களை மேற்கொள்ளவும் உலவியல் அனுகுமுறை அடிப்படையில் பயிற்சி பெற்றவர்களால் வழங்கப்படும் உதவியாகும். ளு.மொறிஷன் - எல்லா சந்தர்ப்பங்களிலும் உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு அளிக்கப்படும் உதவி வழிகாட்டல் ஆகும்.
வழிகாட்டலில் நான்கு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும். 1. தன்னைத்தானே உணர சுயவிளக்தை ஏற்படுத்தல்ää 2. யாதாத்த சூழலுக்கேற்ப இயைபாக்கம் காணல். 3. நிகழ்காலää எதிர்கால நிலமைகளுக்கு ஏற்ப தன்னை இசைவுபடுத்திக் கொள்ளல். 4. சுயதிறன்களை வெளிக்கொணர்ந்து அவற்றை முழுமையாக விருத்தி செய்தல்.  
பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை சேவையின் தேவை: பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை தேவை என்பது ஆசிரியர்ää அதிபர்ää பயிற்றப்பட்ட ஆலோசகர் ஆகியோரால் ஒரு மாணவன் மனநிறைவும்ää சமூகப்பொருத்தப்பாடும் பெற்று தன் ஆற்றல்களை உச்சநிலையை அடைவதற்கு குறிப்பாக அவனது இளமைப்பருவத்தில் வழங்கப்படும் உதவியாகும். புராதான காலங்களில் இச்சேவை இன்று போல் தேவைப்படவில்லை. விஞ்ஞானதொழில்நுட்பம் மாற்றம்ää சனத்தொகைப்பெருக்கம்;ää நகரங்களுக்கான இடபெயர்வுää பொதுசனத்தொடர்பு விரிவாக்கம்ää கலாசார மாற்றம்ää காலவதியாகும் அறிவுத்திறன் ஆகியவற்றால் வாழ்க்கை முறை சிக்கலடைகிறது. இதற்கமைய பெற்றோரும்ää முதியோரும் வழிகாட்ட போது போதிய அறிவு பெற்றிராததால் குடும்ப அமைப்பு சீர்குழைகிறது. மேலும் கல்வி கற்போர் தொகை அதிகரிப்புää கற்கை நெறித்தெரிவுää தொழிற்துறை என்பனவும் பெருமளவு விருத்தியடடைந்தமையால் பாடசாலைகளில் இச்சேவையின் தேவை அவசியம்.
வழிகாட்டல் ஆலோசனைத் தேவைக்கான காரணங்கள் : 01. குடும்ப அமைப்பு பலயீனமடைதல் 2. சமூக கலாசார மாற்றம் 3. அறநெறிää மனிதவிழுமியங்களின் செல்வாக்கு அருகிவருதல். 4. உள்ளுர் யுத்தம்ää இயற்கை அனர்த்தம்ää 5. கற்கை நெறிசார்பான தேவைகள் 6. தொழில் வாழ்க்கைக்கான வழிகாட்டலின் தேவை. இக்காரணிகள் மாணவர்களின் கல்வி முற்றேத்தை பாதிக்கின்றது. இலங்கை கல்வி வரலாற்றில் 1940ற்கு முன் இச்சேவை இடபெறவில்லை. 1960ல் கல்வியியலாளர் இச்சேவை பாடசாலைகளில் தேவையென அறிக்கையிட்டனர். 1981ல் கல்வி வெள்ளை அறிக்கையில் 34-50 ஆம் பந்திகளில் இதன் முக்கியத்துவம் கூறப்படுகின்றது. 1982ல் தயாவுல் மித்ரோ எனும் ஆலோசனை சேவை நிலையங்கள் 26 பாடசாலைகளில் உருவாக்கப்பட்டன.
ஆலோசனைப்பணியின் பிரதான பரப்புகள் : 1. உளவியல்சார் 2. கல்விசார் 3. தொழில்சார் 4. குடும்பம் சார் ஆலோசனைகள்.
ஐ.உளவியல் சார் ஆலோசனைகள்: பதற்றம்ää அளவுக்கதிகமான மன அழுத்தம்ää போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு ஆலோசனை வழங்கல். ஒருவர் தன்னதை; தான் நன்கு விளங்கிக்கொள்ளவும்ää தனது பலத்தையும் பலவீனத்தையும் புரிந்து கொள்ளவும் ஒருவருக்கு உதவி செய்வது இதன் முக்கிய தொழிற்பாடாகும். இது ஒருவரது உளவியல் தேவைகளை திருப்திப்படுத்துவதன் மூலம் சாதகமான உள ஆரோக்கியத்தை பேணச் செய்யும் உதவியாகும்.
ஐஐ.கல்விசார் ஆலோசனை வழங்கல்: மாணவர்களின் கல்வி தொடர்பான இலக்குகளை அமைத்துக்கொள்ள உதவுகிறது. மாணவரது உளச்சார்புää திறன்கள்ää நாட்டங்கள்ää மனப்பாங்குகள்ää அடைவுகள் என்பன தொடர்பான புள்ளி விபரங்களை சேகரிப்பதும் அறிக்கைகளைப் பேணுவதும் இதன் முக்கிய பணியாகும். இங்கு 2 அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் 1. கற்றல்சார் அடைவுகளில் மாணவர்களது வினைத்திறனை ஏற்படுத்தல். ஏற்கனவே திருப்திகரமாக கற்றுக்கொண்டிருக்கும் மாணவனை மேலும் சிறப்பாகச் செயற்பட ஆலோசனை வழங்கப்படுகின்றது. 2. தெரிவு செய்யதலை திட்டமிடுவதற்கு உதவகிறது. ஒரு மாணவன் எப்பாட நெறியைää எந்த நிகழ்ச்சித்திட்டத்தை தெரிவு செய்வதற்கு உதவுகிறது.
ஐஐஐ. தொழில்சார் ஆலோசனை: இது கல்வி ஆலோசனை வழிகாட்டலின் தொடர்ச்சியாகும். இதில் ஒருவரது சொந்தத் திறன்ககள் நாட்டங்களை அடையாளம் காணவும்ää மதிப்பிடவும் உதவி வழங்கப்படுகின்றது. தொழில்வாய்ப்புக்கள் அவற்றிக்கான தகுதிகள் தொழில் நாடியிடம் இருக்கவேண்டிய ஆற்றல்கள்ää திறன்கள்ää ஆளுமைப்பண்புகளை வழங்குவதும் இதில் அடங்கும். ஆலோசனை நாடி தான் எதிர்பார்க்கும் இலக்குகளை எய்துவதற்கும் தமது திறமைகளை வினைத்திறனுடன் பயன்படுத்தவும் ஆலோசகர் உதவுவார்.
ஐஏ. குடும்ப ஆலோசனை :  ஒருவர் குடும்பத்தின் அங்கத்தவர் என்றமுறையில் தனது கடமைகளையும் பொருப்புக்களையும் உரியமுறையில் நிறைவேற்றி வாழ்க்கையை வெற்றிகரமாகவும் திருப்தியாகவும் கொண்டு செல்ல உதவும் செயல்முறையாகும். இது பின்வரும் சந்தர்ப்பங்களுக்கு உதவும். மது அருந்துவதால் ஏற்படும் விரக்திää பதட்டம்ää உளக்குழப்பங்களிலிருந்து விடுதலை பெற. வெற்றிகரமில்லா குடும்பவாழ்க்கையை மீளமைக்க. வெற்றிகரமான குடும்ப வாழ்வில் ஏற்படும் அச்சறுத்தலைத் தவிர்க்க. கட்டிழமைப்பருவத்தினர்ää இளம் தம்பதிகள் போன்றோரின் திருப்தியான வாழ்வுக்காக அறிவுää திறன்ää மனப்பாங்குகளை வழங்கல்.
குறிப்பான பிரச்சினைகளுக்கான ஆலோசனை வழங்கல் : 1.மனவெழுச்சிää அதிர்ச்சிக்கான 2. துயருற்றோருக்கான 3. முதியோருக்கான 4.புற்று நோய்ää எய்ட்ஸ் 5. போதைப்பொருள் ஆலோசனைகள்.
பாடசாலையில் வழிகாட்டல் ஆலோசனை தேவையை உருவாக்கிய காரணிகள் :
1.         நாடுகளின் சமூகப்பொருளாதார கட்டமைப்பு மாற்றங்கள். இவை குடும்ப வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூகமாற்றம் காரணமாக மனித உறவுகள் சிக்கலடைந்தன. தனிமைää குறைவான ஓய்வுää சமூகமாற்றங்களின் வேகம்ää பாராமரிய ஆதரவு அற்றுப் போனமைää விழுமியங்கள் முரண்படக் காரணமானவையால் இத்தேவை ஏற்பட்டது.
2.         அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் சிறுவர்கள் தனிப்பெற்றோருடன் வாழ்தல்ää வேலையின்மைää தீராத நோய்ää வீட்டு வசதிகள்ää வறுமைää போதிய பாராமரிப்பின்மை போன்றவற்றிக்கு எதிராக போராட வேண்டியமையால் வழிகாட்;டல் ஆலோசனை அவசியம்.
3.         பாடசாலை கட்டமைப்புää ஒழுங்கமைப்பு மாற்றம். பரீட்சை அடிப்படைக்கொண்ட சிக்கலான கலைத்திட்டம்ää பாடசாலை உள்ளும் வெளயிலுமான போட்டி
4.         மாணவர்களை எதிர்கால உலகிற்கு தயார்படுத்த.
ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு வழிகாட்டல் ஆலோசனையின் தேவை: 1. தாம் எதிர்நோக்கும் பிரச்;சினைகளை எதிர்கொள்ளவும்ää சிக்கலான சமூகமாற்றங்களுக்கு முகம்கொடுக்கவும். 2. குடும்பத்தில் சிறுவர்களுக்கு போதிய கவனிப்பு வழங்கப்படாமை. இதற்கான காரணிகள் - தாய்ää தகப்பன்ää இருவரும் வெளிநாடு செல்லுதல். தாய்- தகப்பன் கைவிடல். தாய-தகப்பன் குடும்பப்பிரச்சினை 3. உடல்ää அறிவுää மனவெழுச்சிää சமூகவிருத்தி சார் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கு. 4. ஆரம்பப்பாடசாலை மட்டத்தில் வாசித்தல்ää எழுதுதல்ää கணித எண்ணக்கருக்களில் காணப்படும் கற்றல் குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை நீக்குவதற்கு 5. உடலியல் ரீதியான தடங்கள் குறைபாடுகளை அடையாளம் கண்டு பொருத்தமான சிகிச்சை வழங்க. 6. மீற்திறன் மாணவர்களுக்கான விசேட நிகழ்ச்சிகளை ஒழுங்குபடுத்த.
இடைநிலைமட்ட பாடசாலை முறைமையில் வழிகாட்டல் ஆலோசனையை உருவாக்கிய காரணிகள் :
1.         குடும்ப சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றம் : குடும்பத்தகராறுää பெற்றோர் பிரிதல்ää பெற்றோர் (தாய்மார் வெளிநாடு செல்லல்) குடும்பத்தின் குறைந்த சமூகப்பொருளாதார நிலை போன்ற காரணங்களால் குடும்பசூழ்நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது.
            இதனால் பின்வரும் விளைவுகள் ஏற்படும். அ. பெற்றோர் பிள்ளை புரிந்துணர்வின்மை. ஆ. பிள்ளைகளுக்கு போதியளவு அன்புää பாசம் கிடைக்கப்பெறாமை. இ. பெற்றோர்ää பிள்ளைகளை கவனிக்காமை. இந்நிலையில் பிள்ளைகளின் பிரச்சினைத் தீர்க்க பெற்றோரால் போதிய நேரம் எடுக்க ஒதுக்க முடியாது. இத்தகைய சந்;தர்ப்பங்களில் தம்பிரச்சினைகளை தம்மால் தீர்க்க முடியாத போது வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படுகின்றது.
2.         விரும்பத்தக்க பொருத்தமப்பாடான நடத்தையை விருத்தி செய்வதற்கு பாரம்பரிய சமூதாயத்தில் வழங்கப்பட்டு வந்த ஆதாரவின்மை : மிகையான வண்நடத்தைää சகமாணவருடன் முரண்படல்ää சமூக இலிää அதீத பயம்ää பாடசாலை சூழ்நிலைக்கு ஏற்ப பொருத்தப்பாடடைவதில் பிரச்சினைää போதைவஸ்துப்பிரச்சினை போன்ற பிரச்சினைகளால் வழிகாட்டல் ஆலோசனை தேவைப்படுகின்றது. மாணவரின் இவ்விரும்பத்தகாத நடத்தைகளை விடுவிப்பதற்கும்ää வழிகாட்டல் ஆலோசனை அவசியம்.
3.         கட்டிலமைப்பருவ மாற்றம் : இந்த வயதில் உடல்ரீதியான மாற்றங்கள் சம்பந்தமான கவலைகள் பயன்கள் என்பவற்றைப் போக்குவதற்கு. இப்பருவ வளர்ச்சியுடன் தொடர்பான பாலியல் ரீதியான தகவல்களை வழங்குவதற்கு. எதிர்பாராலார் பற்றிய மனப்பாங்கை விருத்தி செய்வதற்கு மேலும்ää இவ்வயதில் ஏற்படும் கோபம்ää பயம்ää விரக்திää பதட்டம் ஆகிய உணர்வுகளால் ஏற்படும் மனவெழுச்சியைக் கட்டுப்படுத்த உதவும்.
4.         பாடசாலை சிக்கல்கள் அதிகரித்தமை. பரீட்சை முக்கியத்துவம் வாய்ந்த கல்வி என்பதால் மாணவர் உயர்ந்த அடைவுமட்டத்தை அடை எதிர்பார்ப்பர். பாடசாலை முடிந்த பின் தனியார் வகுப்பில் நாட்டம். இதனால் ஓய்வின்மைää பதட்டம்ää பயன் தோன்றுகிறது.  வேலை உலகில் மாற்றம் காரணமாக கலைத்திட்டத்தில் மாற்றம். இம்மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றி அமைப்பது மாணவர்களுக்குச் சிரமம். சிக்கலான கலைத்திட்டம் பெற்றோருக்கும் மாணவருக்கும் மன அழுத்தம்ää பதட்டம் என்பன உண்டாகின்றது. மனவழுத்தம் மாணவர் செயற்பாட்டில் விரும்பத்தாகாத தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கற்பத்ற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. பாடசாலை ஆலோசகர் மாணவரின் மன அழுத்தத்தை வெற்றி கொள்ள உதவுவார். பாடசாலை முறையில் ஏற்படும் சிக்கல் ஆரம்ப இடைநிலை மட்ட மாணவர் தம் கற்றல் சார் செயல்களை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல ஒழுங்கான உதவிகள்ää ஆதரவு தேவை. இதனை பாடசாலை ஆலோசகர் வழங்க மாணவர் கற்றல் திறன்பற்றிய தகவல்கள்ää அடைவுகள்ää பொருதாhர உதவிää சமூகபங்குகள் போன்ற மாணவர் சொந்தப்புள்ளி விபரங்கள் பாடசாலை மட்டத்தில் சேகரித்து பாதுகாத்து கற்றல் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு குறைகாண் சோதனைகளை வழங்கி அவற்றின் முடிவுகளைப் பயன்படுத்தி மாணவர் கல்விசார் பிரச்சினைகளைத் தீர்க்க ஆலோசகர் உதவுவார்.
ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு ஆலோசனை வழிகாட்டல்களின் அவசியம்.
இவை இரண்டு பிரிவுக்குள் அடங்கும். 1. பிள்ளையின் விருத்தியில் சாதகமான முறையில் செயற்பட பெற்றோருடன் தொடர்புபடல் :இதன் மூலம் பின்வரும் விடயங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அ. தாய்-தகப்பினிடையே சுமுகமான உறவைத் தாபித்தல். ஆ. பிள்ளைகளுக்கு சமபோசாக்குள்ள உணவுகளை வழங்கச் செய்தல். இ. பிள்ளைகளை ஒழுங்காக பாடசாலைக்கு அனுப்பச் செய்தல். ஈ. பாடசாலை பின் பிள்ளைகள் எவ்வாறு தமது நேரத்தை கழிப்பதென தீர்மானித்தல்.   2. விருத்திசார் தேவைகளை மேற்கொள்ள பிள்ளைகளுடன் நேரடியாக தொடர்புடல். கீழ்குறிப்பிடப்படும் பிர்ச்சினை தீர்ப்பதற்கு மாணவர்களுடன் தொடர்புற வேண்டியுள்ளது. அ. கற்றல் இடர்பாடுகள்ää குறைபாடுகள்ää ஆ. பார்த்தல்ää கேட்டல்ää பேச்சுக்குறைபாடுள்ள பிள்ளைகள் எதிர்நோக்கும் பிர்ச்சினைகள். இ. பாடசாலையின் வகுப்பில் பொருத்தப்பாடு அடைவதில் உள்ள பிரச்சினைகள். ஈ. சாதாரண உளவியல் குறைபாடுகள். உ. பொருளாதார கஷ்டங்கள். ஊ. அதி தொழிற்பாட்டு நடத்தைää அழித்தல் சார் நடத்தைää சமூகத்திலிருந்து பின்வாங்கல் போன்ற சாதகமற்ற நடத்தை.
இடைநிலை மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கலின் அவசியம்:
1.         விருத்திசார் தேவை 2. தடுத்தல் சார் தேவை 3. பிரச்சினைகளை உதவ வேண்டிய தேவை.
இடைநிலை மாணவர்கள் எதிர்நோக்கும் கற்றல் தொடர்பான பிரச்சினைகள் : 1. பாடத்தில் கவனம் செலுத்தாமைää 2. கற்றலில் ஆர்வம் குறைவு 3. கற்றவர்களை நினைவிருத்திக் கொள்வதில் கஷ்டம். பாடப்பிரிவை தெரிவு செய்வதில் கஷ்டம். 4. எழுதல்ää வாசிப்பதில் கஷ்டம்ää 5.பாடசாலைச் செல்ல சோம்பல் பரீட்சை பதட்டம்.
விருத்திசார் தேவையில் கற்றல் பிரச்;சினைகளுக்குத் தீர்வுகாண ஆலோசனை வழங்குவதுடன் சகமாணவருடன் இடை வினைத்திறன்களை வளர்த்துக்கொள்ளவும் தொழில் தேவைபற்றியும் உணர்த்துவது. பொருத்தப்பாடு சம்பந்தமான பிர்சசினைகளான பொருத்தப்பாடு அடையமுடியாமைää சமூக சிலிää அதித பயம்ää போதைப்பொருள் பாவனை போன்றவற்றைத் தடுக்கவும். மாணவர்களுக்கு ஆலோசனை தேவைப்படுகின்றது. மாணவரின் பிரச்சினைகளை எழுமுன் தடுப்பதும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுவதும் இடைநிலைப்பாடசாலையில் அவசியம். 
பாடசாலை வழிகாட்டலும் ஆலோசனை கூறலும் :
பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு அடிப்படையாக அமையும் போக்குகள்: அறிவைப் பாதுகாத்து மாணவர்களுக்கு விநியோகிக்கும் மரபு ரீதியான பாடசாலையாக இல்லாமல் அறிவை வளர்ப்பதுடன் அத்தியவசிய திறன்களை விருத்தி செய்யும் இடமாகவும் பாடசாலை தென்படுகிறது. பாடசாலைகள் யதாத்தபூர்வமான தன்மையை மாணவர்களுக்கு வழங்கும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும். மாறும உலக நிலைமைகளுக்கு ஏற்ப மனிதன் செயலாற்ற வேண்டும். என்பதற்காக பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை சேவைக்கு அடிப்படையாக பின்வரும் போக்குகள் அமைந்துள்ளன. 1. மாணவரின் கல்விசாராத தேவைகளை கவனித்திற்கொள்ளல் : பாடசாலைகளில் கற்பித்தலைத்தவிர வேறு சேவைகளும் வழங்க வேண்டும் என வலுயுறுத்தி விசேடமாக முழுமையான ஆளுமை வளர்ச்சிக்காக அறிவு வளர்ச்சியைப் போல உடலியல்ää மனவெழுச்சிää சமூக வளர்ச்சி அடைய வேண்டுமென ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மாணவனின் வயது வளர்ச்சியடையும் போது அவன் பல்வேறு பிர்ச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இதற்கு அடுத்தவரின் உதவி அவருக்கு தேவைப்படுகின்றது. அத்தகைய எல்லா சந்தர்ப்பங்களிலும் பகுப்பாசிரியரோ பெற்றோரோ உதவமுடியாது. ஒரு பிள்ளைக்கு வகுப்பறைக்கற்றலில் கூட வகுப்பறை சாரா புறக்காரணிகளுடன் பிரச்சினையாகின்றன. இத்தடைகளைத்தவிர்த்து சமநிலை ஆளுமையை விருத்தி செய்ய இது தேவைப்படுகின்றது. எனவேää மாணவரின் கல்விசாரா தேவைகளை முக்கியமாகக் கருதும் தற்காலப் போக்கு இச்சேவை கட்டியெழுப்புவதற்கான பிரதான காரணியாகும். 2. வயதுவந்தோராக சமூகத்தில் அங்கத்தவராவற்கு ஆயத்தம் செய்தல் : மாணவரின் உள்ளார்ந்த திறன்களை விருத்தி செய்வதே கல்வியின்  நோக்கமாகும். பிள்ளைகளால் கிரகித்துக் கொள்ளக்கூடிய அளவுக்கு அறிவை வழங்குவதுடன் வளர்ந்தோர் பருவ வாழ்க்கைக்குத் தேவையான ஏற்றுக்கொள்ளப்பட்ட அடிப்படைத் தேவைகளையும் மாணவரில் விருத்தி செய்தல் வேண்டும். முதிர்ச்சி அடைந்திராத மாணவன் ஒருவனை தன்னில் தானே தங்கி வாழும் பொருப்புள்ள ஒருவனாக மாற்றுவது பாடசாலையின் கடமையாகும். இதனால் ஒவ்வொரு தனிப்பிள்ளையையும் இலக்குவைத்து பாடசாலை சேவைகளை வழங்க வேண்டியுள்ளது. சமூகத்தின் முன்னேற்றம் அதன் எல்லா அங்கத்தவர்களினதும் தங்கியுள்ளது. அதே போல் சமூகத்தின் சட்டதிட்டங்கள் நியமங்களுக்கு உட்பட்டு வாழ்வதை சமூகம் எதிர்பார்க்கிறது. இதனால்ää சமூகத்தின் கோரிக்கைகளுக்கும் சுயபூரணத்துவம் அடைவதற்கான தேவையின் காரணமாக எழும் தனியாளின் கோரிக்கைக்களுக்குமிடையில் மோதல் ஏற்படுகின்றது. இவற்றிக்கிடையில் சமனிலையைப் பேணுதல் பாடசாலையின் பணியாகும். எனவே வளர்ந்தோர் சமூகத்தின் அங்கத்தவராக மாணவரை ஆயத்தம் செய்தல் என்ற பணியை மேற்கொள்ள ஆலோசனை அவசியம்.3. மனித தொடர்புகளை வளப்படுத்தும் ஒரு சூழலை பாடசாலை உருவாக்கும். : தனிநபர்ää சமூக அபிவிருத்திகளில் மனிதத் தொடர்பும் மிகமுக்கியமாகும். எந்தவொரு மனிதனும் தனித்து வாழ முடியாது என்பதால் ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு சூழலில் அங்கத்தவராக இருக்க வேண்டியுள்ளது. குழுவில் வாழ்தல் புது அனுபவமல்ல. ஒருவர் குடும்பம் குழுவில் அங்கத்தவனாகப் பிறக்கிறான். பின் பாடசாலைää சமுhதாயம் போன்றவற்றின் அங்கத்தவராகிறான். குழுவின் வெற்றிகரமான அங்கத்தவராக வாழ இயல்பான ஆர்வம் மட்டுமன்றி வீடுää முன்பாடசாலைää முறைசார் பாடசாலை போன்றவற்றில் பெறும் அறிவும் உள்ளது. ஒரு குழுவின் வெற்றிகரமான தொடர்பைப் பேணுவது எல்லாப்பிள்ளைகளுக்கும் முடியாது. இன்னொரு பிள்ளைக்கு கடினமானதாகவும் காணப்படும். இதற்குக் காரணம் அப்பிள்ளையின் கடந்த கால தொடர்புகள்ää ஊர் நம்புவான்   எனவேää பிள்ளையை இவ்வாறு சூழலிருந்து விடுவித்து அவர்களை சமுகத்தில் விரும்பக்கூடிய பிரஜையாக மாற்றுவதற்கு பாடசாலையில் நல்ல மனிதத் தொடர்புகள் விருத்தியடைக்கூடிய சூழலை உருவாக்குவது அதன் அடிப்படைப் பணியாகும்.  
இப்பாடசாலை வழிகாட்டல் ஆலோசனையுடன் தொடர்புடைய வழிகாட்டல்கள்:  1. வழிகாட்டல் ஆலோசனை சேவை தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும். : இச்சேவை தமது நோக்கங்களை அடைந்து கொள்ள ஆரம்பப்பாடசாலை இடைநிலை அதற்குகப்பாலன ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். ஒரு கட்ட மாணவர் முன்னேற்றம் அதற்கு முந்திய கட்டத்தில் பெற்ற உடல்ää உளää உளவியக்க முதிர்ச்சியின் அடிப்படையில்ää சமூகவிருத்தியிலும் தங்கியுள்ளதால் வழிகாட்டல் ஆலோசனை படிமுறை ஒழுங்கில் உருவாக்கப்பட வேண்டும். அப்போது ஆரம்ப நிலையிலிருந்து சிரேஷ்ட நிலைநிலைவரை தொடர்ச்சியாக உதவியைப் பெற இயல்பாகவே பழகிக்கொள்வர். இது பிள்ளையின் விருத்தி தேவைகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும். அத்துடன் பெற்றோரின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப ஆதாரமாக அமையும். 2. இச்சேவை நெகழ்ச்சியானதாக இருக்க வேண்டும் : மாணவரின் தேவைகள் ஒருவரிலிருந்து மற்றொருவருக்கு வேறுபடும். பாடசாலைக்கு பாடசாலை பிரதேசத்திற்குää பிரதேசம் மாணவரிடையே வேறுபாடு காணப்படும். அவ்வாறேää பாடசாலை சமூக அமைப்புää பௌதீக சமூக வளங்கள் கற்றல்ää கற்பித்தல் தன்மை பெற்றோர் நிலை  முதலிய வேறுபடும். எனவேää அந்நந்த பாடசாலைக்கும் மாணவர் தேவைக்கும் பொருத்தமான விதத்தில் இச்சேவை நெகிழ்ச்சியுடைதாக இருக்க வேண்டும். பிள்ளையின் விருத்திக்கட்டத்தை கவனித்து அதற்கேற்ற வித்தத்தில் நுட்ப முறைகளை பயன்படுத்த இது நெகிழ்ச்சியுடையதாக இருக்க வேண்டும். 3. இச்சேவை ஒரு கற்றல் செயல்முறையாக இருக்க வேண்டும் : ஆலோசனை செயல்முறை மூலம் கற்பவற்றில் சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களுக்கு மட்டும் பொருந்துவனவாகவும்ää அநேகமானவை பொதுவாகவும் பயன்படும். (உ-ம்) குறித்த பாடநெறியைக் கற்பதற்கு முக்கியமான சவால்களும்ääவிருப்புக்களும் திறன்களும் எவை தெரிந்து கொண்டு மாணவன் அவ்வறிவை எதிர்காலத் தொழில் திட்டமிடலுக்கு பயன்படுத்துவான்.
பாடசாலையின் நண்பன்ää நண்பிகளை பெற்றுக் கொள்ள சிரமப்படும் மாணவர் அந்நிலையிலிருந்து விடுபட தமது ஆளுமைக் குறைபாடுகளை கண்டு கொள்ள வேண்டும். அத்துடன் சிறந்த சமூகத்தொடர்புகளை ஏற்படுத்தத் தேவையான திறன்களையும் விருத்தி செய்ய வேண்டும். இது தொடர்பில் பாடசாலை ஆலோசனை மூலம் பெற்ற வளர்ந்தோர் பிற்காலத்தில் சமூகத்தில் வாழத் தேவையான அறிவை பெற்றுக்கொடுக்கிறது. எனவேää ஆலோசனையானது ஒரு கற்றல் செயல்முறையாகத் தேவையான சூழலை இச்சேவை கட்டியெழுப்ப வேண்டும். இப்பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கும் திறன்களை விருத்தி செய்யக்கூடிய கற்றல் சந்தர்ப்பங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். 4. எல்லா முயற்சிகளும் ஒருங்கிணைந்தாக இருக்க வேண்டும் : ஆசிரியர் குழாத்தில் ஒவ்வொரு ஆசிரியரும் தன் திறமைக்கு ஏற்ப இச்சேவைக்கு பங்களிப்புச் செய்ய முடியும். இதில் பங்குபற்றும் அனைவரினதும் நடவடிக்கைகளுக்கிடையில் ஓர் இணைப்பு இருக்க வேண்டியது அவசியம். இதன்படி இச்சேவையானது இயன்றளவு எளிமையானதாக ஒழுங்கமைக்க வேண்டும். நிர்ப்பந்திக்கப்பட்ட குறிக்கோளின் படி சுதந்திரமாக பணியாற்ற வேண்டும். பல்வேறுவகையான பணிகளை பல்வேறு நபர்களிடம் ஒப்படைக்கும் போது அதைக் கையாளக்கூடிய திறன் உள்ளதா என்பதை அடிப்படையாகக் கொண்டு செய்ய வேண்டும். அச்சேவைக்கு பொருப்புடைய அனைவரும் நேரடியாகவோää மறைமுகவாகவோ அதற்குப்பங்களிக்க வேண்டும். 5. இச்சேவை பாடசாலைச் சூழலுடன் இடைத்தொடர்புள்ள அங்கமாக இருக்க வேண்டும : இச்சேவையின் குறிக்கோள்களும் செயற்பாடுகளும் பாடசாலை ஒழுங்கமைப்பின் குறிக்கோள் செயற்பாடுகளுடன் இணைந்திருக்க வேண்டும். தேசிய குறிக்கோள் அடிப்படையில் பாடசாலை குறிக்கோளுடன் தீர்மானிக்கப்பட்டது. எனினும்ää பாடசாலை அமைவு பிரதேசத்ததை அன்டிய தேவைகளும் பாடசாலையை குறிப்பைப்பாதிக்கும் எனவேää பாடசாலை குறிக்கோளின் செல்வாக்குச் செலுத்தும் பிரதேசத் தேவைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
பாடசாலை வழிகாட்டல்ää ஆலோசனை வழங்கல் சேவையின் ஒழுங்கமைப்பு:
இச்சேவையை வெற்றிகரமாக நடாத்த பாடசாiயில் உள்ள வசதிää சூழ்நிலைää பிள்ளைகளின் தேவைகள் என்பவற்றைக்கருத்தில் கொண்டு ஒழுங்கமைக்கப்பட வேண்டும். வௌ;வேறு நாடுகளில் இச்சேவை பின்வரும் முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. 1. ஒன்றிணைக்கப்பட்ட(மையநாட்ட முறை) : இது கூட்டு மொத்தமாக கேந்திர மையப்படுத்தப்பட்டு செயற்படுகின்றது. இச்சேவையுடன் தொடர்பான எல்லா விசேட சேவைகளும் இம்மத்திய நிலையத்தினால் செயற்படுத்தப்படுகின்றது. இங்குää எல்லா மாணவருக்கு சேவை வழங்க முடியாது. சேவை ஒழுங்கு முறைமைää பின்னூட்டல் மூலம் சேவையை அபிவிருத்தி செய்ய முடிதல். போன்ற காரணங்களால் மிகவினைத்திறன் ஆனது. எனினும்ää ஒன்றிணைக்கப்பட்ட தன்மையால்ää பாடசாலையின் எல்லா ஆசிரியர்களும் பங்குபற்ற முடியாதுää நடாத்துவதற்கு கூடுதலான செலவு ஏற்படும்.  2. பரலாக்கப்பட்ட (மைநீக்க முறை):இச்சேவையின் பொருப்பு பாடசாலை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இணைப்பாக்கம்ää அதிபர்ஃபிரதி அதிபர் பெரும்பாலும் பயிற்சி பெற்ற ஆசிரியரே நியமிக்கப்படுவர். எல்லா ஆசிரியர்களும் பங்குபற்ற முடிந்தாலும்ää விசேட சேவை ஒன்று இல்iலாம இதன் குறைபாடு ஆகும். இணைப்பாக்கமும்ää நிறுவாகமும்ää வினைத்திறனானது. எனக்கூற முடியாது. கல்விக்காக ஒதுக்கப்பட்ட காலத்தில் ஒரு பகுதி இச்சேவைக்கு ஒதுக்கப்படுவதால் இச்சேவை காரணமாக செலவு அதிகமானது.   3. ஒன்றிணைக்கப்பட்டதும்ää பரவாக்கப்பட்டதும் ஆகிய பன்புகள் கலந்த ஒருங்கிணைந்த முறைää எல்லா நல்ல அம்சங்களும் இதில் அடங்கும்ää எனினும்ää குறைபாடுகள் : 1. ஒரு பாடசாலையில் சேவையிலுள்ள நிபுணர்களின் எண்ணிக்கை போதாது. 2. வழிகாட்டல் ஆலோசனை கூறல் சம்பந்தமான போதியறிவு ஆசிரியருக்கு இல்லாமை. 3. ஒவ்வொருவருடைய பொருப்புக்களையும்ää வௌ;வேறாக இனம்கண்டு அவர்களது பொறுப்புக்களை செயற்படுத்த முடியாமை. இச்சேவை பாடசாலை கல்வி வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாகும் போதுää மாணவருக்கு விலைமதிப்பற்ற சேவையாக அமையும். 
பாடசாலை வழிகாட்டல் ஆலோசனை வழங்கல் சேவையுடன் தொடர்பான அடிப்படைச் செயல்முறைகள் : தனித்துவமான இடம் பா. ஆலோசகருக்கு உரியது.- இச் சேவையின் அடிப்படைச் செயல்முறைகள் 1. தகவல்கள் அட்டவணைப்படுத்தும் செயன்முறை : இது தனியாள் மதிப்பீட்டுச் சேவையாகும். இதில் தனியாளைப்பற்றிய தகவல்கள் பதியப்பட்டிருக்கும். (உ-ம்) வரவறிக்கைää சோதனைப்புள்ளிகள்ää ஆளுமைப்பண்புகள். ஒரு ஆலோசனைக்கான தேவை ஏற்படும் போது மாணவரைப்பற்றிய தகவல்களை இவ்வட்டவணையிலிருந்து பெறலாம். இதன் மூலம் தகவல்களை திரட்டுவதும்ää வகுப்பாய்தல்ää தொகுத்தல்ää பதிதல் தகவல்களை அறிக்கைப்படுத்தல்ää இரகசியம் பேணல் என்பன அவசியம்.
2.தகவல்களை வழங்கும் செயல்முறை: மாணவருக்கு வினைத்தறனான சேவையை வழங்க இது முக்கியம்ää பின்வரும் சந்தர்ப்பங்களில் மாணவர் பற்றிய தகவல்கள் தேவைää 1. ஒரு மாணவனை புதிய பாடசாலைக்குஃ வகுப்பிற்கு அனுப்பும் போதுää 2. தொழிலைத் திட்டமிடும் போதுää 3. சொந்தப்சமூகப்பிரச்சினை ஒன்றுக்கு முகம் கொடுக்கும் போது. இச்சந்தரப்பங்களில் பின்வரும் தகவல்கள் தேவைப்படும். மாணவனின் ஆளுமைப்பண்புகள்ää திறமைகள்ää பலவீனங்கள்ää கல்வி சந்தரப்பங்கள்ää வேலை உலகுபற்றிய தகவலகள் ஆரோக்கியம் எதிர்பாலார் தொடர்புகள்ää சமூகப்பொருத்தப்பாடு. இத்தகவல்கள் திறள்பதிவேடுகளாக பேணப்படுவதோடு இற்றைப்படுத்தப்படவும் வேண்டும்.
3. உரிய இடத்தில் அமர்த்தும் செயற்பாடு:  மாணவரின் முழுவளர்ச்சிக்கு உதவும்ää இறுதிக்குறிக்கோளை அடைய அவசியம். இரண்டு வகைப்படும். அ. பாடசாலை உள்ளே உரிய இடத்தில் அமர்த்துதல்ää : ஒவ்வொரு பிள்ளையினதும் கல்விää உளவிருத்தி மட்டத்தை கருத்தில் கொண்டு பிள்ளையை மையமாகக் கொண்டு செயற்படும் முறை பிள்ளைகளின் திறமைக்கு ஏற்ப சில பாடங்களுக்கு வகுப்புக்களுக்கு ஒழுங்கு செய்தல். உயர்மட்டம் சாதாரணம்ää கீழ்மட்டம் என மாணவர் திறமைக்கேற்ப குழுக்களாக்குதல். ஆ. பாடசாலைக்கு வெளியே உரிய இடத்தில் அமர்த்துதல்: மாணவர்களுக்கு முழுநேர பகுதி நேர தொழிலைப் பெற உதவுதல்ää இது இலங்கையில் இல்லை. 4. பின்தொடர் நடவடிக்கை செயல்முறை : மாணவன் பாடசாலையில் கழிக்கும் முழுக்காலத்திலும் அவனது முன்னேற்றம்ää பின்னடைவு தொடர்பான தகவல்களைத் திரட்டி ஆசிரியர்களுக்கும் ஆலோசகர்களுக்கு அத்தகவல்களைப் பெற்றுக்கொடுத்தல். பாடசாலையில் வெளியேறி சமூகத்தில் சேர்ந்த பின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் இச்செயன்முறையின் மூலம் நடைபெறுகிறது. இது பாடசாலையை விட்டு விலகிய பின்னரும் மாணவனுக்கு உதவுகிறது. தொழிலுக்கான தேர்ச்சியைப்பெற்றுக் கொடுத்தல்ää தொழில் முன்னேற்றத்திற்கு உதவுதல் போன்றவைகளும் இருக்கும்.

பாடசாலை வழிகாட்டல் ஆலோசனையில் பாடசாலை அதிபரின் வகிபங்குகளும்ää பொறுப்புக்களும்.
1.         தலைமைத்துவம் 2. செயற்பாடுகளை ஒன்றிணைத்தல்ää 3. வளங்களைத் தேடுதலும்ää வழங்குதலும் 4. சேவை தொடர்பான தீரமானம் எடுத்தல் 5. செயற்பாடுகளைத் திட்டமிடுதல்ää 6. இச்சேவைபற்றி மாணவர்ää ஆசிரியர் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல்.
ஆசிரியரின் பொறுப்புக்கள் : 1. திட்டமிடுபவர்ää 2. ஓழுங்கமைப்பவர்ää 3. ஆலோசனை வழங்குபவர் 4. கனிப்பீடு செய்பவர் 5. வழிகாட்டுபவர் 6. நெறிப்படுத்துபவர் 7. தலையீடு செய்பவர்
ஆலோசகரின் கடமைகள் : 1. ஆலோசனை தேவைப்படும் மாணவனை இனங்காணல் 2. அம்மாணவன் பற்றிய விபரங்களை சேகரித்தல் 3. ஆலோசனை வழங்கல்ää 4. பதிவேடுகளை பேணல். 5. அதிபர்ää பிற ஆசிரியர்ää பெற்றோர்ää வெளியிலுள்ள வாண்மையாளர்கள் என்போரிடையே தொடர்பைப் பேணல்.
இலங்கை ஆலோசனை சேவையின் வரலாறு : 1957ல் அறிமுகப்படுத்த முயற்சிக்கப்பட்டது. 1957ல் வெளியான 10ம் சுற்றறிக்கையில் கல்விப்பணிப்பாளர் வழிகாட்டல் நிகழ்ச்சியின் பொதுவான அமைப்புப் பற்றிய விபரங்களை வெளியிட்டார். பாடசாலை ஆலோசனைத்திட்டம் தொழில்சார் வழிகாட்டாலாக இருந்துடன் அமெரிக்க தொழில்வழிகாட்டல் சேவைக்கு அமைய காணப்பட்டது. 1970ல் இச்சேவை ஸ்தம்பிதம்ää 1980வரை பாடசாலை ஆலோசனைச் சேவை நடந்தமைக்கான சான்றுகள் இல்லை. 1983ல் ஜூலையில் கல்வி அமைச்சின் மதிப்பீட்டு வழிகாட்டல் ஆய்வுப்பிரிவு உருவாக்கப்பட்டது. ஆலோசனை சேவை இப்பிரிவினால் மேற்கொள்ளப்படவிருந்தது. பின் Nஐநு ஒப்படைக்கப்பட்டது. போதிய நிதிவசதி அமைச்சிடம் இருக்கவில்லை அதனால் தேசிய இளைஞர் மன்றத்துடன் இணைக்கப்பட்டது. 1983ல் யவுன் மித்ரோ ஆலோசனை நிகழ்ச்சித்திட்டத்துடன் இலங்கையில் முiயான சேவை ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு பல்கலைகழகத்தில் கல்வி உளவியல் துறைää மருத்துவத்துறைää தேசிய இளைஞர் சேவை மன்றத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது. முதலாவது ஆலோசனை சேவை கொள்ளுப்பிட்டி மஹானாம வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின் பண்டாரவளைää கண்டிää காளிää இரத்திரனபுரி என்பவற்றிக்கு விஷ்தரிக்கப்பட்டது. 1994ன் பின் இச்சேவை நிலையங்கள் மூடப்பட்டன. பின் அரசார்பற்ற நிறுவனங்கள்ää மாதர் உதவி சேவை குடும்பப் புனருத்தாபன மத்திய நிலையம்ää குடுப்பக்கட்டுப்பாட்டுச் சங்கத்தின் (ஆலோக்கையா) போன்ற நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. பின் தனியார் துறையும் இதனை ஆரம்பித்தது. 1யுடீஇ 1ஊஇ 300 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளில் - முழுநேர ஆலோசகர். 1யுடீஇ 1ஊஇ 300 குறைந்த மாணவர்களுக்கு  - பகுதிநேர ஆலோசகர்.

இலங்கையில் பாடசாலை முறைமைக்கு வெளியில் சேவையிலுள்ள ஆலோசனை சேவைகள் : 1. ஆலோக்காய. இலங்கை குடும்பக்கட்டுப்பாட்டுச் சங்சம் நிறுவியதுää பாலியல் பிரச்சினைää இனவிருத்தி தொடர்பான சுகாதார பிரச்சினைகளுக்குää இளைஞர்ää மனமுடித்த பெற்றோருக்கு வழிகாட்டியது. ர்ஐஏ எயிட்ஸ் நிகழ்ச்சித்திட்டங்களை வழங்கியது. ஆலோசகர்களுக்கு பயிற்சியளித்தல் 2.சிதுமின் - பௌத்த தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு உலகலாவிய மனித பிரச்சினைகளை தீர்க்க முற்படுகிறது. தேசிய மட்டத்தில் சேவைகளை வழங்கிறது. சிறுவர் துஷ்பிரயோகம்ää விபச்சாரம்ää பாலியல் துஷ்பிரயோகம்ää தொடர்பான சேவைகளை வழங்குகிறது. பௌத்தää இந்து சமயத்தலைவர்களுக்கு பயிற்சி வழங்குகிறது. பாடசாலை ஆலோசகருக்கு பயிற்சி வழங்குகிறது. 3.மாதர் உதவி சேவை:  1987ல் உருவானதுää சமூக சேவைத்திணைக்களத்தில் பதியப்பட்டது. எல்லாக் குடும்பப்பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட்டது. வன்முறைக்குட்பட்ட பெண்கள் பிள்ளைகளுக்கு உதவி வழங்கல் இதன் நோக்கம். கற்பழிப்புää குடும்ப வன்முறைää பாலியல் துஷ்பிரயோகம்ää பாதிக்கப்படுவோருக்கு ஆலோசனையும் சட்ட உதவும் வழங்கல். 4. பிள்ளைகளின் பாலியல் துஷ்பிரயோகம்ää சுரண்டல்ää விபச்சாரம்ää என்பவற்றை நிர்மூலமாக்கும் நிறுவனம் (நுளுஊயுPநு) 1985ல் தாபிக்கப்பட்டது. பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பிள்ளைகளுக்கு சிகிச்சையளித்தல்ää மும்மொழிகளிலும் விழிப்புணர்வு திட்டங்களை நடாத்துதல். பிள்ளைகள் மத்தியில் வேலை செய்யும் அரசää அரச சார்பற்ற ஊழியர்களுக்கு பயிற்சியளித்தல். உளவியல் பரிகாரச் சிகிச்சையும் ஆலோசனை சேவையும் வழங்குதல். 5. உளவியல்சார் கற்கை நிறுவனங்கள் - 1983ல் கொழும்ப சச்சவிய ஜோன் கெயார் நினைவு ஆலோசனை நிலையத்தில் இயங்குகிறது உளலவியல்ää கல்விää குடும்ப ஆலோசனை வழங்குகிறது. 

ஆலோசனை அணுகுமுறைகள்: 1. உளப்பகுப்பாய்வுக் கொள்கை அணுகுமுறை- இதன் முன்னோடி கிக்மென் பிறைட் கொள்கை சார்ந்த மற்ற உளவியலாளர் அட்லர்ää அலெக்சாண்டர்ää கோணிää கார்யுங்போடிங். ஒருவரின் நனவு மனதை விட நனவிலி மனம் மிகுந்த சக்திவாய்ந்த. நனவிலி ஒருவரின் ஊக்கல்ää நடத்தை ஆகியவற்றுக்கு மூல காரணமானது. என்பதை வலுயுறுத்துகிறது. தீவிர வெறுப்புகள்ää பயங்கள்ää பாலியல் தேவைகள் யாவும் நனவிலிக்கு தள்ளப்பட்டு ஒடுக்கப்படுகின்றன. இவ்வாறு ஒடுக்கப்பட்டவை ஒருவரின் எதிர்காலத்தில் நடத்தைப்பிரள்வுகள் உளக்கோலாறுகள் ஆகியவற்றிக்கு மூலகாரணம் என்று கூறுவார்.
உளபகுப்பாய்வு ஆலோசனை நுட்பம் : இது உளமருத்துவர்களாலும்ää உளப்பரிகாரிகளாலும்ää பெருமளவு பயனபடுத்தப்படுகின்றது. தீவிர நரம்புக்கோலாறைää உளக்கோலாரைத்தீர்க்க உதவுகிறது. பாடசாலை ஆலோசனை சேவைக்கு பொருத்தமற்றது.   

  
  

2 comments:

  1. அருமையான தகவல்கள். pdf கிடைத்தால் உதவியாக இருக்கும்

    ReplyDelete